Creative Commons License


THIS WORK ,THE CLOUD OF THE PRINCESS
IS LICENSED UNDER
CREATIVE COMMONS ATTRIBUTION-NONCOMMERCIAL-NO DERIVATIVE WORKS 3.0 LICENSE
.

இளவரசியின் மேகம் பாகம் 1 அத்தியாயம் 22

கடந்த அரைமணி நேரத்தில் நடந்து விட்டிருந்த சம்பவங்கள் இமயாழை கதி கலங்கடித்துவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம்! சேவகன் நேற்று இரவு நடந்ததாக சொன்ன சம்பவங்களை மனதிற்குள்ளேயே அலசி ஆராய்ந்துகொண்டே வந்தவள் குமுதினியின் திடீர் பிரவேசத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். ' எதற்காக குமுதினி தன்னை தனி அறைக்கு இழுத்து சென்றாள்? அய்யோ! அவள் என்னாவேலாமோ சொன்னாளே ? அவள் பதட்டமாய் இருப்பதை பார்த்தால் ஏதோ பிரச்சனையில் சிக்கி தவிப்பவள் போல் அல்லவா இருக்கிறது? என்ன பிரச்சனையாக
இருக்கும்? ஜயேந்திரன் சொன்னது உண்மையென்றால் அவள் இத்தனை நேரம் அவளது அத்தையிடம் அல்லவா பேசிக்கொண்டிருந்திருக்க வேண்டும்? இல்லை இல்லை! அக்கா இப்படி பேசி இருந்தால் கூட எதையோ கண்டு பயந்திருகலாம் என்று நினைக்க தோன்றும் . ஆனால் குமுதினி தைரியசாலி . நிஜமாகவே ஏதோ நடந்திருக்க வேண்டும். என்ன என்று கேட்பதற்குள் எங்கே ஓடிவிட்டாள் இவள்? அக்காவையும் அழைத்துக்கொண்டு மதியமலைக்கு வரச்சொல்லியிருக்கிறாள் என்றால் இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை . அதுவும் அவள் கடைசியாக சொன்ன வாக்கியத்தின் பொருள் என்னவாக இருக்கும்? "கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்" எதற்காக இதை நம்மிடம் சொன்னாள்? நாட்டில் முக்கியமான யாரோ என்றல்லவா சொன்னாள் . அதுவும் அறைமேட்டில் இப்போது இருக்கும் நபர் யாராய் இருக்கும்? ஒருவேளை ஒருவேளை ... அக்கவாக இருக்குமோ? அய்யோ... அக்காவுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படுமோ? கடவுளே ... அப்படி மட்டும் எதுவும் நடந்து விட கூடாது... அய்யோ... முடிச்சு போட முடியாத விஷயங்களுக்கு முடிச்சு போட தோன்றுகிறதே... சேவகன் சொல்லுவதையும் குமுதினி சொல்லுவதையும் கோர்த்துப்பார்த்தால் குழப்பமாய் இருக்கிறதே... அக்காவை யாராவது பொன்விளையுரிலிருந்து தொடர்ந்து வருகிறார்களா? அப்படி இருந்தால் குமுதினிக்கு அது எப்படி தெரிந்திருக்கும்? இல்லை இல்லை... இப்படி தான் இருக்க வேண்டும். அக்கா நேற்று பூசாரியை கேட்ட கேள்விகளை வைத்து பார்த்தால்
அக்காவும் நேற்று இரவு அந்த பல்லக்கு இருந்த இடத்திற்க்கு போயிருக்க வேண்டும்.
ஒருவேளை யாரையாவது எதிர்பார்த்து கூட சென்றிருக்கலாம் ... அந்த எதிர்பார்க்கப்பட்ட
நபர் அக்காவுக்கும் குமுதினிக்கும் மட்டும் தெரிந்த யாராவதாக இருக்கலாம்... அந்த நபரிடம் அக்கா
ஏதாவது காரியத்தை பல நாள் முன்பே ஒப்படைத்திருக்க வேண்டும்... அந்த காரியத்தை குறித்து
பேசுவதற்க்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அங்கே ஏதாவது பிரச்சனை ஆகியிருக்கும்... அதனால்
அக்கா கையில் கிடைத்த கல்லை விட்டு எறிய அது குறி தவறி சேவகன் மேல் பட்டிருக்கும் ... ஆனால்
இதற்கும் குமுதினி சொன்ன வாக்கியத்திற்கும் என்ன சம்பந்தம்? இல்லை இல்லை இப்படி யோசித்து
கொண்டிருந்தால் கண்டிப்பாக குழப்பம்தான் மிஞ்சும். இதற்கு ஒரே வழி அக்காவை பார்த்து பேசுவதுதான் '

செம்பாருத்தியை பார்த்து பேசுவதற்க்காக அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் இமையாழ். தானும் மற்றவர்களும் சற்று நேரத்திற்க்கு முன்பு வைத்தியரின் அறைக்குள் நுழைந்த அதே கதவின் அருகில் சென்று நின்றாள். கதவு சார்த்தி இருந்ததை கண்டு சற்று ஆச்சரியப்பட்டாள் . திறக்கலாமா வேண்டாமா என்று ஒரு நொடி யோசித்தவள் , திறக்கலாம் என முடிவு செய்து கதவை வெளிப்புறமாக இழுத்தாள் . கதவு திறக்கவில்லை. உள்ப்புறமாக தள்ளிப்பார்தாள் . திறக்கவில்லை. 'எதற்காக அக்கா கதவை சார்த்தி கொள்ள வேண்டும்? ' எவ்வளவு யோசித்தும் பதில் கிட்டியப்பாடில்லை. 'நடப்பது நடக்கட்டும் என கதவை தட்டி விடலாமா?' என ஒரு நொடி யோசித்தாள் . சட்டென அந்த என்ணத்தை மாற்றிக் கொண்டாள். 'ஜயேந்திரனை எப்படியாவது கண்டுபிடித்துவிட்டால் போதும். பிறகு கதவை திறந்து உள்ளே செல்வதா, இல்லை வெளியே காத்திருப்பதா என்று முடிவு செய்து கொள்ளலாம்' என நினைத்தவள் மெதுவாய் திரும்பி மறுபடியும் அந்த பிரம்மாண்டமான வீட்டின் வெளியே வந்தாள். சற்று நேரத்திற்கு முன்னர் அவளது கண்களில் தெரிந்த அதே போன்ற காட்சி மறுபடியும் தெரிந்தது. தூரத்தில் தெரிந்த ஆலைமரத்தினடியில் சேவர்கார்களும் வேறு சில குதிரையின் மேல் அமர்ந்திருந்த வீரர்களும் வாய் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். 'மீண்டும் பல்லக்கை கேட்டு யாரேனும் வந்திருப்பார்களோ? இல்லை இல்லை ...இவர்களை பார்த்தால் படைவீரர்கள் போல் அல்லவா இருக்கிறது .. அதுவும் பத்து பதினைந்து பேர் இருப்பார்கள் போல் இருக்கிறதே இவர்களுக்கு நம்முடைய சேவகர்களுடன் என்ன சண்டையாக இருக்கும்? அய்யோ இது என்ன புது குழப்பம்.... சேவகன் நம்மை நோக்கி அல்லவா கையை சுட்டி காட்டுகிறான். ஆஹா .. குதிரயிலிருந்து வீரர்கள் கீழே குதிக்கிறார்களே ..நம்முடைய சேவகர்களை மரத்தொடு கட்டி போடுகிறார்களே ... இது என்ன அநியாயம் ?.. இந்த நேரம் பார்த்து அக்காவும் கதவை சார்த்திக்கொண்டு விட்டாள். இதோ மூன்று வீரர்கள் குதிரையில் நம்மை நோக்கி வேகமாய் வருகிறார்கள் ... இவர்கள் யாருடைய வீரர்களாய் இருக்கும்? ஒருவேளை தளபதி யாரையாவது அனுப்பி இருப்பாரோ? தளபதியின் வீரர்கள் என்றால் எதற்காக சேவகர்களை கட்டிப்போடவேண்டும் ? ஒருவேளை இப்படி இருக்குமோ? சேவகன் சற்று முன் சொன்னதெல்லாம் கற்பணை கதைகளா? தளபதி ஏதோ முக்கியமான விஷயத்தை பற்றி நேற்று முந்தைய நாள் யோசித்துக்கொண்டிருந்தாரே ... அதனால் எல்லோரையும் சிற்ப மண்டபத்துக்கு போக சொன்னாரே சீச்சீ எதற்காக மனதை போட்டு குழப்பிகொள்ள வேண்டும் ? இதோ குதிரை வீரர்கள் அருகில் வந்துவிட்டார்கள் .. இன்னும் ஓரிரு வினாடிகளில் அவர்களே விஷயத்தை சொல்லுவார்கள் . அதுவரை எதையும் பற்றி யோசிக்காமல் இருப்பதே நலம்' என முடிவு செய்துகொண்டு மிக சுலபதிற்கு வந்துவிட்டிருந்த வீரர்களை பார்த்தாள் இமையாழ். அருகில் வந்து குதிரையை நிறுத்தி அதிலிருந்து கீழே குதித்தான் வீரன் ஒருவன். வணக்கம் கூட சொல்லாமல் நேராய் விஷயத்திற்கு வந்தான்.
'தேவி தங்களின் சேவகர்களை சிறைப்பிடித்துவர எங்களுக்கு ஆணை இடப்பட்டுள்ளது . இதை தங்களிடம் தெரிவிக்கவே இங்கு வந்தோம்' என்றான் சற்று திமிரான தொனியில்.
இமையாழ் அந்த சேவகனை வெறித்தது பார்த்துவிட்டு கேட்டாள்'
தளபதியின் சேவகர்களை அனுமதியின்றி சிறையில் அடைக்கும் உரிமைக்கொண்டாடும் தங்கள் தலைவன் எவன்?' .
'தேவி தாங்கள் பெண் என்பதால் எங்கள் வாட்கள் இன்னும் உறையிலேயே இருக்கின்றன . தாங்கள் இப்பொழுது கூறிய வார்த்தைகளை ஒரு ஆண்மகன் கூறி இருந்தால், இந்நேரம் அவனுடைய கழுத்த்து மேலே தலையை காணோமே என தேடிக்கொண்டிருக்கும்' என்றான். இதை கேட்ட மற்ற இரு வீரர்களும் தங்களுக்குள்ளேயே சிரித்தனர்.
' உங்கள் வாளைவிட உங்கள் வாய்தான் நீளமாய் இருக்கிறது . நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உங்கள் வீரத்தை பறையடித்து கொள்வதை பார்த்தால் தாங்கள் படைவீரர்களா இல்லை படைவீரர் வேடம் போடும் கூத்து நடிகர்களா என சந்தேகம் எழுகிறது. உங்கள் ஒத்திகைக்கு விருதாளியாக எனக்கு விருப்பமில்லை. சேவகர்களை கட்டவிழித்துவிட்டு தாங்கள் செல்லலாம்' என்று கூறிவிட்டு அந்த வீரனை கண்கலாலேயே எரித்து விடுவதை போல் முறைத்தாள் இமையாழ்.
'தேவி. தாங்கள் தளபதியின் துணைவி என்பதால் தங்களிடம் சொல்லிவிட்டு வரும்படி எங்களுக்கு கட்டளை . சொல்லி விட்டோம். இனி எங்களுக்கு இங்கே வேலை இல்லை. தங்கள் சேவகர்களையும் தங்கள் பல்லக்கையும் மேலூர் சிறையிலும் சிற்ப மண்டபத்திலும் வேண்டுமானால் வந்து பார்த்து கொள்ளுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் எங்கள் சேவகர்களும் எங்கள் பல்லக்கும் இங்கே வரும். தாங்கள் அதை வேண்டுமானால் ஒத்திகை பார்க்க பயன்படுதிதகொள்ளலாம்' என்று கூறிவிட்டு ' வாருங்கள் செல்வோம்' என்று அருகிலிருந்த மற்ற இரு வீரர்களை பார்த்து சொல்லிவிட்டு குதிரையில் ஏறி சிட்டாய் பறந்தான் அவன்.
'வந்தவர்கள் யார். எதற்காக சேவகர்களையும் பல்லக்கையும் இழுத்து செல்கிறார்கள்?' என எதுவுமே தெரியாமல் விழித்தாள் இமையாழ்.

8 comments:

  1. Hey Why did u do switch to Tamil??
    I need almost two hrs to read ur post. You are losing out on viwership.. I mean readership. May be we can have two versions. Tamil and English.:)

    ReplyDelete
  2. i took 6 hours to write it... !!!! that dosen't answer ur question... does it ;)

    ReplyDelete
  3. I've been reading your posts for long. The story is turning really interesting. Keep up the good work!

    ReplyDelete
  4. y u have switched to tamil all of a sudden i.e in the middle of the novel. i cant finish this passage throughout my life. so plz write it in english next time.

    ReplyDelete
  5. hey,story semmaiya pooguthu, super.. cant wait.. regular a post pannu.. mean time, (i know im one among those who insited blogging in tamil, but )munnadi english a better 4 reading ..

    ReplyDelete
  6. Thanks All for ur comments.

    There are two difficulties i have seen people face in the last chapter written.

    (i)- Some of you Cannot read tamil.
    (ii) - Some of you find the font difficult to read.

    The second difficulty will be solved if Internet Explorer (Version 6.0 or above) is used.

    The first difficulty will be solved if i continue writing in English.

    Since many think it would be good to continue in english, i shall go with that and write the forthcoming chapters in english.

    Thanks again for the comments
    Arun.

    ReplyDelete
  7. No Arun!!!!...Please dont change the language... You cannot get the rythm unless you think and write in your mother tongue... I have been reading your posts for the past 1 month and the way the story is going is simply fantastic...Infact i thought of appreciating you when you posted the last entry in Tamil...but unfortunately i was sucked into my work...

    ReplyDelete
  8. @Maya ...

    Hey..Thanks a lot for taking time off to drop in ur comment...that was really refreshing :)

    but that puts me in a dilemma...dosen't it? :D

    I guess i need to take one path or the other ... and i am afraid it is not going to be the way u wanted it to be :( ...
    Two compelling reasons.
    ONE: Though i am not even close to a decent writer in english, many of the guys reading this can't even read tamil....

    TWO: If i finish this story successfuly [A BIG IF...needs all ur support to make it tiny :)], i shall surely write it in tamil from the scratch...


    so all ppl out there,as far as now, please adjust with my 'aangilam'!!!




    PS:
    (i) Tamil happens to be NOT my mother tongue. Sundara Telugu is what i speak at home...

    (ii) @ ALL,

    I would like to know more abt all those who read the story and give invaluable/morale boostin comments.... so do join introduce yourselves in the orkut community...
    http://www.orkut.com/Community.aspx?cmm=22505821


    Thanks a lot guys,

    ReplyDelete

Thanks for coming. You are visitor number ...


View My Stats